தமிழகம்

புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு.!

Summary:

tamilnadu school education - minister sankottaian

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு என்று தனியாக ஆசிரியர் நியமனம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமனம் இல்லை. அந்த பணியை கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கவனிப்பார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

எத்தனை நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ அத்தனை நாட்களுக்குரிய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement