ஒரே அறிவிப்பால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!



tamilnadu people appriciate edapadi palanichami

நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கால்நடை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும், வேளாண்மையை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு ஒட்டுமொத்த தமிழகமும் பாராட்டி வருகிறது. பல பகுதிகளில் இந்த அறிவிப்புக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

edapadi

அதேபோல் மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுத்து புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பாப்பன்விடுதி கிராமத்தை சேர்ந்த எஸ்.பி.என்.குணசேகரன் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் அறிவிப்பை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு சென்று தமிழக முதல்வரின் அறிவிப்பை மாணவர்களிடையே எடுத்து கூறியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.