பொங்கலுக்கு தமிழகத்தில் அமலாகிறதா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்?..! மக்களே கவனமாக இருங்க..!!

பொங்கலுக்கு தமிழகத்தில் அமலாகிறதா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்?..! மக்களே கவனமாக இருங்க..!!



Tamilnadu May Affect During Pongal Celebration Lockdown Measures 

 

சர்வதேச அளவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தனது வீரியத்தை கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருந்தாலும் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் பரவத்தொடங்கியது. 

இதனால் கொரோனா பரவல் விகிதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால், இந்தியாவில் பல விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

tamilnadu

சர்வதேச விமான பயணிகள் பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை செயலாற்றி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் லேசாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

தெலுங்கானாவில் XBB 1.5 என்ற உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா உறுதியாகி உள்ளது. இது ஒரு நபருக்கு பரவினால் அவர் மூலமாக 17 நபருக்கு பரவும் என்றும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இந்த கொரோனா இல்லை என்றாலும், தமிழக மக்கள் பிரதானமாக சிறப்பிக்கும் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகியுள்ளது. 

tamilnadu

பொங்கலுக்கு முன்பு அல்லது பொங்கலுக்கு பின்பு மக்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், கொரோனா பரவல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் மாவட்ட ஆட்சியர்களால் விதிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது. கொரோனா தீவிரமடையும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு போன்றவை மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து தடுப்பூசியை செலுத்தி பயன்பெற்று கொரோனாவின் பரவல் விகிதம் குறைவாக இருந்தால் எவ்வித கட்டுப்பாடுகளும் வித்திக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.