மின்வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்..! அரசு அதிரடி அறிவிப்பு.!



Tamilnadu Government announcement for protect elephant

னவிலங்குகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு ஈடுபாடு காட்டி வருகிறது இந்நிலையில் உயர் மின்னழுத்தம் மின்வெளிகளால் மின்விபத்து ஏற்பட்டு வனவிலங்குகள் அதிலும் குறிப்பாக யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. 

எனவே வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் மின்வேலிகள் அமைப்பதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது என்பது முடியாத காரியமாகிறது. அதே சமயத்தில் காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் வேண்டும். இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்று இருப்பது:- 

மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. மேலும் ஏற்கனவே மின்வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தால் மின்வேலிகளுக்கான அனுமதி பதிவு செய்வதும் கட்டாயம். 

இந்த விதிமுறைகள் தமிழ்நாட்டு அரசியல் அறிவிப்பு செய்யப்பட்ட காப்புக்காடுகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 

ஏற்கனவே மின்வேலிகள் அமைத்து வைத்திருப்பவர்கள் அவர்களின் வேலிகள் சம்பந்தமான அந்தந்த மாவட்ட வனஅலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயம். இந்த நிபந்தனைகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை களத்தில் இறங்கி ஆய்வு செய்து இது குறித்த விவரங்களை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.