அரசியல் தமிழகம் Corono+

கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு.! நிம்மதியில் மக்கள்.!

Summary:

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐ.டி.சி. நிறுவன விழா, ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழா, கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றார்கள். எனவே கொரோனா வைரஸ் நோய் குணமடைவதற்காக தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் செலவிலேயே இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகார் சட்டப்பேரரைவத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கையை நேற்றையதினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பிகாரில் தாங்கள் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. 


Advertisement