பணக்காரர்களின் நோய் தான் கொரோனா! ஏழைகளுக்கு இல்லை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு!

பணக்காரர்களின் நோய் தான் கொரோனா! ஏழைகளுக்கு இல்லை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு!


Tamilnadu cm talk about corona

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த கொடூர வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில், தமிழகத்திலும் சற்று அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்.ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என தெரிவித்தார்.

edapadi

கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். இனி வரும் காலங்களில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.