தமிழகம் லைப் ஸ்டைல்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு..? இந்த மருந்தை சாப்பிட்டால் உடனடியாக குணமாகுமாம்..! மாணவனின் கண்டுபிடிப்பு..!

Summary:

Tamilnadu 14 years school student found medicine for corono virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் செய்தும் இந்த இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் தனது பாட்டி சொன்னன 11 மூலிகைகளை கொண்டு கொரோனா வைரஷிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 14 வயது பள்ளி மாணவர் ஒருவர்.

திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் இசக்கிராஜ் என்ற அந்த 14 வயது மாணவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், சீனாவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசுக்கு எனது பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்துள்ளேன் என்றும், இந்த மருந்தை சாப்பிட்டால் நோய் தாக்கியவரின் மூச்சுக்குழாய், நுரையீரல் மற்றும் உணவு குழாய் ஆகியவைகள் படிப்படியாக சீராகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மருந்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க முயன்றதாகவும், ஆனால், பள்ளி மாணவன் என்பதால் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று வரவேண்டும் என்று கூறினர். அதன்படி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் கலெக்டரிடம் நான் கண்டு பிடித்த மருந்தை கொடுத்துள்ளேன். இதை மருந்தை எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என அந்த மாணவன் கூறியுள்ளார்.


Advertisement