விளையாட்டு சிறுமியிடம் விளையாடிய முதியவர்; பொதுமக்கள் தர்ம அடி; போக்சோ சட்டத்தில் கைது.!

விளையாட்டு சிறுமியிடம் விளையாடிய முதியவர்; பொதுமக்கள் தர்ம அடி; போக்சோ சட்டத்தில் கைது.!


tamilnadu - thuththukkudi - oldman - sex tourcher

தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை பொதுமக்கள் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி ஆண்டாள் நகரில் வசித்து வருபவர் மணி. இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரது அருகில் சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தீடீரென கதறி அழுதுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பின் வந்த போலீசார் அம்முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.