தமிழகம்

சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தலா? தமிழக தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்.!

Summary:

tamilnadu - soolur - admk mla death- election commitionar

தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், எம்எல்ஏக்கள் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பல முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தொதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த கனகராஜூக்கு  இன்று காலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுக கட்சியினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இதனால் சூலூர் சட்டமன்ற தொகுதியின் தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா ஷாகு கூறும்போது: சூலூர் எம்எல்ஏ மறைவு குறித்து சட்டப்பேரவை செயலாளர் முறையாக அறிவித்த பின்பு இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம் என்றார்.


Advertisement