தமிழகம் Covid-19 Corono+

கொரோனா மரணத்தைவிட, தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.? சற்று ஆறுதலான செய்தி.!

Summary:

Tamil Nadu total corona discharge case upto date

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்றுமட்டும் 5,684 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இப்படி கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தினாலும் தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை சற்று நிம்மதியை கொடுக்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா ...

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரை 2,21,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்றும் மட்டும் தமிழகம் முழுவதும் 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் நாளுக்கு நாள் முன்னேறிவரும் நிலையில், விரைவில் இந்த கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நிலைமை விரைவில் இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement