13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..! புதிதாக 118 பேர் மரணம்.. மேலும் தகவல்கள்.!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டுவரும் தமிழக சுகாதாரத்துறை இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 986 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 118 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 5,043 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 52,759 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.