வாயில் துணிவைத்து கழுத்து நெரித்து 10 வயது மகள் கொலை.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடுமையா? பயங்கரம்.!
மகளின் வாயில் துணியை வைத்து கொடூரமாக கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thirukovilur Crime News: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகவேல். இவரின் மனைவி சத்யா (வயது 30). கடந்த 2015ம் ஆண்டில் சத்யாவுக்கும், கெங்கவரம் பகுதியில் வசித்து வரும் முருகவேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு 10 வயதுடைய வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார்.
குடும்பத்தகராறு:
அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் சிறுமி வர்ஷினி ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். வர்ஷினி பிறந்தபின் சத்யாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து பின் உடல்நலம் குன்றி இறந்துள்ளது. இதனால் சத்யாவிற்கும் - அவரின் கணவர் முருக வேலுக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!
நகைக்காக கொலை?
இதனிடையே, பள்ளி விடுமுறை காரணமாக சத்யா கடந்த மாதம் 18ம் தேதி தனது தாய் வீடான கண்டாச்சிபுரத்துக்குச் சென்று மகள் வர்ஷினியுடன் தங்கியிருந்துள்ளார். இதனிடையே, நேற்று தனது மகளை மர்ம நபர்கள் நகைக்காக கொலை செய்து தப்பியோடியதாக கண்டாச்சிபுரம் காவல் துறையினருக்கு சத்யா தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றம் இல்லை:
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமி வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். சந்தேகத்தின் பேரில் 3 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியும் முன்னேற்றம் இல்லை.
அதிர்ச்சி திருப்பம்:
இதனால் சந்தேகத்தின் பேரில் சத்யாவிடம் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சி உண்மை வெளியானது. அதாவது, வர்ஷினியின் தாய் - தந்தை இடையே நிலவிய பிரச்சனை காரணமாக, சத்யா தனது மகளை கொலை செய்துள்ளார். பின் தானும் தற்கொலை செய்யலாம் என்ற முடிவில் இருந்துள்ளார். தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றபோது, மகள் கண்முன் துடிதுடிக்க இறந்தது நினைவில் வந்து பயந்து இருக்கிறார்.
கொடூர கொலை:
இதனால் மகளின் காதில் இருந்த கம்மலை அகற்றி வீசிவிட்டு, நகைக்காக கொலை என தகவல் தெரிவித்துள்ளார். மகளின் வாயில் துணியை வைத்து அழுத்தி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். பின் சிறுமியை தேடுவதுபோல நடித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை அறிந்த காவல்துறையினர் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!