ரேஷன் அட்டைதாரர்களே டிசம்பர் 31 தான் கடைசி நாள்.... உடனே கிளம்புங்க! மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!
ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியானவர்களுக்கு நேர்மையான சேவையை உறுதி செய்ய, மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டை உறுப்பினர்களும் e-KYC (விரல் ரேகை பதிவு) கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
e-KYC பதிவு: கடைசி தேதி அறிவிப்பு
ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, விரல் ரேகை அடிப்படையிலான e-KYC பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவை முடிக்க டிசம்பர் 31, 2025 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் இந்தத் தேதிக்குள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பதிவை முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் ரேஷன் அட்டை விவரங்கள்
தமிழகத்தில் தற்போது மொத்தம் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் சுமார் 98.45 லட்சம் முன்னுரிமை (PHH) ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், 8.64 லட்சம் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ரேஷன் அட்டைதாரர்களே தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை..... அரசு வெளியிட்ட அறிவிப்பு!
போலி கார்டுகள் நீக்கம் – உண்மையான பயனாளிகளுக்கு நன்மை
போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த ரேஷன் அட்டை e-KYC நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அரசு நலத்திட்டங்களின் பயன் சரியானவர்களிடம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடைசி நாளை தவறவிட்டால் ரேஷன் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அனைத்து அட்டைதாரர்களும் காலதாமதம் செய்யாமல் விரைந்து விரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே அரசின் வலியுறுத்தலாக உள்ளது.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கானா டாஸ்மாக் விடுமுறை நாட்கள் வெளியானது!