குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கானா டாஸ்மாக் விடுமுறை நாட்கள் வெளியானது!
தமிழகத்தில் அரசின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் டாஸ்மாக் துறை, பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் உச்ச விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை பட்டியல் வெளியாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நிலவரம்
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.100 கோடி அளவிலான மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.150 கோடி முதல் ரூ.170 கோடி வரை உயர்கிறது.
பண்டிகை காலங்களில் சாதனை விற்பனை
பண்டிகை நாட்களில் விற்பனை மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் டாஸ்மாக் துறை தமிழக அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தரும் துறையாக உள்ளது.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு! தமிழக அரசு வெளியிட்ட முழு லிஸ்ட் பட்டியல்...!
வருடத்திற்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை
மழை, வெள்ளம், புயல் அல்லது பண்டிகை காலங்களில் பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு பொதுவாக விடுமுறை இல்லை. ஆண்டுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 – குடியரசு தினம், பிப்ரவரி 1 – வடலூர் ராமலிங்கம் நினைவு தினம், ஏப்ரல் 31 – மகாவீர் ஜெயந்தி, மே 1 – தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், செப்டம்பர் 26 – மிலாது நபி, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட டாஸ்மாக் துறை, குறைந்த விடுமுறை நாட்களுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இந்த விடுமுறை பட்டியல் 2026 ஆம் ஆண்டில் அரசு அறிவிப்பு அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குஷியோ குஷியோ! பொங்கல் பரிசு ரூ.5000..... தமிழக அரசு அதிரடி!!