தமிழகம்

தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!! எந்தெந்த மாவட்டம் தெரியுமா??

Summary:

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ள

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெய்யில் சுட்டெரிக்கும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


Advertisement