Pongal Gift Tamilnadu: பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.3000? ஒதுக்கீடு செய்த அரசு.. விரைவில் தித்திப்பு செய்தி..!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாக, ரேஷன் கடைகளில் ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2500 பணமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த நிலையில், 2022, 2023, 2024ம் ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த 2025ம் ஆண்டு பொங்கலின்போது, பரிசுத்தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது. பணம் ஏதும் கொடுக்கவில்லை.
சட்டப்பேரவை தேர்தல்:
இதனிடையே, தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.248 கோடி முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வைத்து பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை கொள்முதல் செய்யப்படும். இந்த தகவலை கூட்டுறவுத்துறையும் உறுதி செய்தது.
இதையும் படிங்க: தித்திப்பு செய்தி.. 2026 பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.5,000?.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.!
-rvec5.jpeg)
மக்களுக்கு அதிர்ச்சி:
பொங்கல் பரிசுத்தொகுப்புக்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும், பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் வருமா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி தெரிவிக்கையில், "தற்போதைய நிலையில் ரூ.248 கோடி என்பது பச்சரிசி, சர்க்கரை, கருப்பு கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ரொக்கப்பணம் குறித்து நிதித்துறை அமைச்சருடன் முதல்வர் கலந்தாலோசனை செய்து அறிவிப்பு வெளியிடலாம். அறிவிப்பு வந்ததும் தொகை உடனடியாக ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்படும்" என கூறினார்.
இதன் வாயிலாக பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.2000 முதல் ரூ.3000 வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!