#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
கண்கலங்கவைக்கும் தமிழக கொரோனா மரணம்! 10 ஆயிரத்தை கடந்தது! மொத்த பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்றும் மேலும் புதிதாக 5088 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று வெளியான தகவலின் படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 5 ஆயிரத்து 88 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1295 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதல் தரும் வகையில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 718 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.