RTO Registration: சொந்த வாகன பதிவு.. தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வசதி..!



Tamil Nadu Introduces New RTO Vehicle Registration System: No Need to Visit RTO Office for Personal Vehicle Registration from December 1

Vehicle RTO Registration: புதிதாக வாகனங்களை வாங்குபவர்கள், இனி வாகன பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக வாகனங்களை வாங்கும்போது, அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO Office) எடுத்துச் சென்று பதிவு செய்ய வேண்டும். இதனிடையே, தனிநபர் தனது சொந்த பயன்பாட்டுக்கு வாங்கும் கார், டூவீலர் போன்ற வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு டிசம்பர் 01, 2025 (இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய நடைமுறை:

தமிழ்நாட்டில் செயல்படும் 1,500 வட்டார போக்குகவரத்து அலுவலகத்தில், மொத்தமாக நாளொன்றுக்கு 8,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் 3,500 வாகனங்கள் சொந்த பயன்பாட்டுக்கு ஆகும். புதிய வாகனத்தை பதிவு செய்ய வாகனத்தின் உரிமையாளர், விற்பனை பிரதிநிதி நேரில் வரவேண்டும். இது கட்டாயமாக இருந்தது. ஆனால், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, இந்த நடைமுறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிம் ஆக்டிவ்ல இல்லைனா அவ்ளோதான்.. முடங்கும் வாட்ஸ்அப் & டெலிகிராம் கணக்குகள்.!

RTO registration

அமலுக்கு வந்தது:

இதுதொடர்பான நடைமுறை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், உரிய உத்தரவை தமிழ்நாடு அரசுக்கு பிறப்பித்தது இருந்தனர். நீதிமன்ற ஆணைக்கேற்ப தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் கஜலட்சுமி டிசம்பர் 01 முதல் புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வர உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.