தமிழகம் Covid-19 Corono+

மகிழ்ச்சியான தகவல்! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! இன்றைய நிலவரம்.

Summary:

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 4389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 4389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 4389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1140 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரேனாாவிலிருந்து 5245 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மொத்தமாக 6,27,703 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து குறைந்துள்ளது மக்கள் மனதில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement