BREAKING : சற்று முன்.... தமிழக தேர்தல் தேதி வெளியானது! அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!!!



tamil-nadu-assembly-election-2026-polling-date-announce

தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 தொடர்பான முக்கிய அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

ஏப்ரல் 23-ல் ஒரே கட்ட வாக்குப்பதிவு

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை வெளியான உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க: BREAKING: ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி..... சற்றுமுன் அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!!!

மே 4-ல் தேர்தல் முடிவுகள்

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு மே 04, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் நிலை தெளிவாகும்.

அரசியல் கட்சிகள் தீவிரம்

தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளதால், முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சார நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகின்றன. வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பணிகள் மாநிலம் முழுவதும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தல், அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கும் தீர்மானமாக இருப்பதால் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: சற்று முன்... லீக்கானது தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி...... ஏப்ரலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம்!!!