5 திருநங்கைகள் உள்ளிட்ட 9 லட்சம் பேர் பங்கேற்பு: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்..!!

5 திருநங்கைகள் உள்ளிட்ட 9 லட்சம் பேர் பங்கேற்பு: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்..!!



Tamil Nadu and Puducherry 10th class public examination is going to start tomorrow

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. 

இந்த தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் எழுத உள்ளனர். வரும் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் உள்ளிட்ட 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேர் பங்கேற்கின்றனர்.

மேலும் தனித்தேர்வர்களாக  5 திருநங்கைகள் உள்ளிட்ட 37 ஆயிரத்து 798 பேர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களில் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.