தனது திறமையால், டீக்கடைகாரர் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்.! அசத்தும் தமிழச்சி!! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் உலகம் டெக்னாலஜி

தனது திறமையால், டீக்கடைகாரர் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்.! அசத்தும் தமிழச்சி!!

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் வசித்து வருபவர் ஜாபர் உசேன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம். 15 வயது நிறைந்த இவர் மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.  மேலும் அவரது தாயும்அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவோடு www.go4guru.com என்ற வலைதளம் மூலம் நடத்தப்பட்ட சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். 

Image result for தான்யா தஷ்னம்

மேலும் இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்ற தான்யா தஷ்னமிற்கு விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவருடன் ஆந்திராவைச் சேர்ந்த மாணவி சாய்புஜிதா மற்றும்  மகாராஷ்டிராவை சேர்ந்த அலிபக் என்ற மாணவர் ஆகியோருக்கும் நாசா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில்  விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இவர்கள் ஒருவாரம் தங்கவுள்ளனர் எனவும் அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிப்பார்த்து விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo