பிரதமர் மோடி குறித்து உதயநிதி சர்ச்சை பேச்சு.! அரசியலுக்காக என் தாயை இழுக்க வேண்டாம்.. சுஷ்மா ஸ்வராஜ் மகள் பதிலடி.!

பிரதமர் மோடி குறித்து உதயநிதி சர்ச்சை பேச்சு.! அரசியலுக்காக என் தாயை இழுக்க வேண்டாம்.. சுஷ்மா ஸ்வராஜ் மகள் பதிலடி.!


sushma swaraj daughter condemns to udhayanidhi

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பிரச்சாரத்தில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் என கூறப்படுபவர்கள், முகம் சுளிக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் அவரது தாய்க்கு எதிராக கீழ்தரமான வகையில் பேசி ஆ.ராசா சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனையடுத்து ஆ.ராசா மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆ.ராசா அடுத்த 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். 

அதேபோல் சமீபத்தில் தயாநிதி மாறன் அவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தநிலையில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய, உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்தநிலையில், சுஷ்மா ஸ்வராஜின் மகள்  உதயநிதிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு என் அம்மாவின் நினைவுகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய். பிரதமர் மோடி என் அம்மா மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும் தான் எங்களுக்குத் தோள் கொடுத்தார்கள். உங்களது பேச்சு எங்களை வேதனைப்படுத்துகிறது. என பதிவிட்டுள்ளார்.