கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது!. உச்சநீதிமன்றம் அதிரடி!

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல எனவும் பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும்வரை பீகாரில் சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.
தேர்தல் கமிஷன், இதுவரை பீகார் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பீகார் தேர்தல் உரிய நேரத்தில் நிச்சயமாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.