தமிழகம்

மருத்துவமனை வாசலிலே காத்திருந்து சுஜித்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி

Summary:

Sujith vijayabasker

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி தாஸ் - சகாயமேரி இவர்களின் இரண்டு வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதனை அடுத்து குழந்தையை மீட்க கடந்த 80 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. குழந்தையை மீட்க முயற்சித்த அணைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இதனை அடுத்து குழந்தை இறந்தது குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனை குறித்து தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சோகமான ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


Advertisement