புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மருத்துவர்கள் வழங்கிய கெடு! சுஜித்தை மீட்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.
திருச்சி மாவட்டம் மனப்பாறையை அடுத்து அமைந்துள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.
தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழு உட்பட எத்தனையோ பேர் முயற்சி செய்தும் குழந்தையை தற்போதுவரை மீட்கமுடியவில்லை. அதிக சக்தி வாய்ந்த ரிக் இயந்திரத்தை கொண்டு அருகில் துளையிட்டு குழந்தையை மீட்க முயற்சித்தும் பூமியில் பாறை அதிகமாக இருப்பதால் அந்த முயற்சியும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் குழந்தை குழிக்குள் விழுந்து தற்போதுவரை 69 மணி நேரம் ஆகிவிட்டது. 75 மணிநேரத்திற்குள் குழந்தையை மீட்டாள் நிச்சயம் காப்பாற்றமுடியும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் அவர்கள் சொன்ன கெடு முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ளதால் விரைவில் குழந்தையை மீட்கவேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.