தமிழகம்

மகனை பறிகொடுத்த வேதனையோடு சுஜித்தின் பெற்றோர்கள் செய்த காரியம்!! இதயத்தை நொறுக்கும் ஒற்றை புகைப்படம்!!

Summary:

sujith parents tearful tribute to sujith at borewell

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 

அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள்  நடைபெற்றது. மக்கள் அனைவரும் உயிரோடு மீண்டுவரவேண்டும் என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் அந்தமுயற்சிகள்  தோல்வியில் முடிவடைந்தது. குழந்தை உயிரிழந்திருந்தது.

பின்னர் நேற்று முதல் நாள் அதிகாலை 4.30 மணியளவில் சிறுவன் சுஜித்தின் உடல் சிதைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் அவர்களது பெற்றோர்கள் தீராத வேதனையில் துடிதுடித்து போயுள்ளனர்.

அதனை தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்கள் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த ஒற்றை புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரின் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கியுள்ளது.


Advertisement