தமிழகம்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுவதற்கு முன் சுஜித் ஆடிய அழகிய நடனம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Summary:

Sujith cute dance video goes viral

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கிட்டத்தட்ட 73 மணி நேரத்தை கடந்தும் சிறுவனை இதுவரை மீட்கமுடியாமல் தவிப்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது குழிக்கு அருகே மற்றொரு குழிதோண்டப்பட்டு அதன்மூலம் சிறுவனை மீட்க முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. அதிலும் பாறைகள் குறுக்கிடுவதால் அந்த முயற்சியிலும் பின்னடைவு ஏற்பட்டு மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முயற்சியை கைவிடாமல் மீட்பு குழு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் சிறுவன் சுஜித் நடனமாடியிருக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த மழலை அழகில் சுஜித் நடனம் ஆடியிருப்பதும், தற்போதைய அவனின் நிலையை நினைத்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். குழந்தையை விரைவில் மீட்க வேண்டி நாமளும் பிரார்த்தனை செய்வோம். 


Advertisement