தமிழகம்

நெஞ்சம் பதபதைக்கிறது! இறைவா உனக்கும் கண் இல்லையா? சுஜித்தை மீட்பதில் மேலும் சிக்கல்.

Summary:

Sujith current status and process update

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் தற்போது வரை மீட்கப்படாமல் இருப்பது அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் குழந்தையின் இரு கைகளிலும் சுருக்கு போடுவதில் சிக்கல், சரி பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்கலாம் என்றால் 15 அடிக்கு கீழ் பெரிய பாறை. பாறையை உடைத்து சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு. அப்பா, இந்த முறை குழந்தையை எப்படியும் மீட்டுவிடுவார்கள் என்றால் அவர்களாலும் முடியவில்லை.

சரி, என்னதான் வழி என்று யோசித்து மிக சக்தி வாய்ந்த ரிக் இயந்திரத்தை குழி தோண்ட கொண்டுவந்தார்கள். இந்த முறை நம்பிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், அந்த ராட்சச இயந்திரத்தினால் கூட அந்த பாறையை உடைக்க முடியவில்லை. இதனை அடுத்து மூன்று மடங்கு அதிக பலம் வாய்ந்த ரிக் இயந்திரம் வருவதாக கூறினார்கள்.

சரி, இந்த முறை கண்டிப்பாக குழந்தை வெளியே வந்துவிடும் என்று நம்பினால் அந்த இயந்திரமும் பழுதாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சரி போரவெல் இயந்திரம் மூலம் பல துளைகள் போட்டு மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் தோண்டலாம் என திட்டமிட்டு அதன்படி வேலை நடந்துவரும் நேரத்தில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் தற்போது கனமழை பெய்துவருகிறது.

இறைவாவாவாவாவாவா! அந்த சிறு குழந்தை என்ன தவறு செய்தது? ஒரு குழந்தைக்கு எந்தனை சோதனைகளைத்தான் தருவாய்? பார்க்கும் உனக்கும் கண் இல்லாமல் போனதோ என அங்கு நடக்கும் காட்சிகளை பார்க்கும் நமக்கு நெஞ்சம் பதபதைக்கிறது.


Advertisement