தமிழகம்

வீட்டிற்கு கூட கொண்டு செல்லாமல் நேராக கல்லறைக்கு செல்லும் சுஜித்தின் உடல்! கதறி துடிக்கும் மக்கள்.

Summary:

Sujith body at pathima puthur kallarai thottam

கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தத்தில் இருந்து கடந்த 80 மணி நேரமாக குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்கவேண்டும் என 300 கும் மேற்பட்டோர் போராடினர். ஆனால், எந்த முயற்சியும் பலனிக்காமல் சிறுவன் சுஜித் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் உடலை சவப்பெட்டியில் வைத்து நேராக கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றுள்னனர்.  மணப்பாறையில் உள்ள பாத்திமா புதூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் சுஜித்தின் உடல் அடக்கம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.

கல்லறை தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சுஜித்தின் உடலுக்கு உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது.


Advertisement