தமிழகம்

சுஜித்தை காப்பாற்ற ஆன செலவு எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்.

Summary:

Sujith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை சுஜித். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

கடந்த ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது 80 மணி நேரங்கள் கடந்ததை அடுத்து மீட்பு பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குழந்தை சுஜித்தும் உயிரிழந்தான். இதனால் தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. 

இந்நிலையில் தற்போது சுஜித்தை காப்பாற்ற ஆன செலவு 11 கோடி செலவு ஆனதாக பொய்யான தகவல் வெளியானது. இதனை அடுத்து தற்போது திருச்சி கலெக்டர் அது பொய்யான தகவல் என்று ஆன செலவு 5000 லிட்டர் டீசல் மற்றும் 5 லட்சம் செலவு ஆனதாகவும் கூறியுள்ளார். 


Advertisement