தமிழகம்

சாராய ஊறலை குடித்து சுருண்டுவிழுந்த மாணவர்கள்.! சற்று நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி முதல

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி முதல் வரும் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாராய விற்பனை அதிகரித்திருப்பதுடன், வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் சாராய ஊறல் போட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்து அழித்துவருகின்றனர்.
 
இந்தநிலையில், கடலூர் மாவட்டம், பெத்தநாயக்கன் குப்பத்தில் உள்ள ஏரிப்பகுதியில் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த ஊறலை 3 மாணவர்கள் குடித்துள்ளனர். அந்த ஊறலை குடித்த சில நிமிடத்தில் அவர்கள் மூவரும்  மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள்  மயங்கிக்கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சாராய ஊறல் போட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement