கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
பிரியாணி அண்டாவில் அடைத்து மாணவனை கடத்த முயற்சி? தாய் பகீர் புகார்..!!
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட எடமலைப்பட்டி என்னும் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன், கடந்த 7 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளி முடிந்தாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.
அப்போது, வழியில் அவனுடன் பயிலும் சக மாணவர்கள் 2 பேர், சிறுவனின் கை மற்றும் கால்களைக் கட்டியுள்ளனர். பின், அவனை பிரியாணி அண்டாவில் அடைத்து பாத்திரக்கடையின் சரக்கு வாகனத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், இதனை பார்த்து கொண்டிருந்த ஓட்டுனரின் உதவியாளர் அந்த சிறுவனை மீட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் தாயார் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். அதில், தன் மகன் பள்ளி முடிந்து வீடு திருப்பும் போது இந்த பயங்கர சம்பவம் நடந்ததாகவும், ஓட்டுநரின் உதவியாளர்தான் தன் மகனை விடுவித்ததாகவும் தெரிவித்திருந்தார். பின், போலீசார் அந்த இரண்டு மாணவர்களையும் அழைத்து எச்சரிக்கை விடுத்தது அனுப்பியுள்ளதுமேலும், இந்த சம்பவம் கடத்தல் நோக்கத்துடன் நடந்திருக்க கூடும் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.