தாமதமாக வீட்டிற்கு வந்ததால் கண்டித்த தந்தை.. மனமுடைந்து மாணவன் எடுத்த விபரீத முடிவு.!

தாமதமாக வீட்டிற்கு வந்ததால் கண்டித்த தந்தை.. மனமுடைந்து மாணவன் எடுத்த விபரீத முடிவு.!



student-suicide-for-dad-scolad

வீட்டிற்கு தாமதமாக வந்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை பகுதியில் வசித்து வருபவர் சாந்தகுமார். இவரின் மகன் தேவராஜ் (வயது 14). இவர் பொன்மலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தேவராஜ் சரிவர படிப்பில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, நண்பர்களுடன் அடிக்கடி விளையாடி வந்துள்ளார். 

இதனால் படிப்பில் கவனம் செலுத்தும்படி சாந்தகுமார் மாணவரிடம் தெரிவித்திருக்கின்றார். மேலும், புதன்கிழமை பள்ளி முடிந்து விளையாடச் சென்ற மாணவன் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், ஆவேசமடைந்த சாந்தகுமார் அவரை இனி நீ விளையாட செல்லக்கூடாது, தாமதமாக வீட்டிற்கு வரக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்துபோன தேவராஜ், தனது அறைக்குள் சென்று கதவை தாழ்போட்டுக் கொண்டார். தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பின்னும் மாணவர் வெளியே வராததால் சாந்தகுமார் கதவை தட்டி இவ்வளவு நேரம் என்ன செய்கிறாய், வெளியே வா என கூப்பிட்டுள்ளார். இருப்பினும் மாணவர் வெளியில் வராததால் சந்தேகமடைந்த தந்தை, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். 

trichy

அப்போது சிறுவன் தேவராஜ் தூக்கில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சிறுவன் தேவராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினர். தனது தந்தை கண்டித்ததால் மனமுடைந்துபோன மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.