கொரோனாவை தடுக்க தேவை அனைத்துக் கட்சி கூட்டம் அல்ல, மருத்துவர்களின் ஆலோசனை மட்டுமே..! முதல்வர் எடப்பாடி.



Stalin asked some questions to Eps

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்னையிலிருந்து இன்று காரில் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு கூறியுள்ளார். சேலத்தில் இதுவரை 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில் அதில் 7 பேர் குணமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தான் முதலிடம் வகித்து வருகிறது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்திற்கு எந்த ஒரு பதிலும் சொல்ல விரும்பவில்லை.

corona

ஸ்டாலின் முதலில் தமிழக அரசை குறை சொல்லுவதை விடுத்து பிரச்சனைக்கு தீர்வு கூறினால் பரிசீலிக்கப்படும். கொரோனா நோய் பரவலைத் தடுக்க தேவையானது அனைத்துக் கட்சி கூட்டம் கிடையாது, மருத்துவர்களின் ஆலோசனை மட்டுமே. கொரோனாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின். ஆனால் மக்களை பாதுகாப்பதே எங்களின் கடமை என்று எடப்பாடி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.