
special train for christmas
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சென்னை இடையே சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் வகையிலும், திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் வகையிலும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 25 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு திருச்சிராபள்ளியை சென்றடையும்.
24 ஆம் தேதி திருச்சியிலிருந்து இரவு 9 மணிக்கு கிளம்பும் இந்தச் சிறப்பு இரயில் நாளை காலை புதன்கிழமை 3.30 மணிக்கு சென்னையை வந்தடையும். என இரயில்வே துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement