தமிழகம்

குடிக்க பணம் தராததால் மிருகமாய் மாறிய கொடூர மகன், துடிதுடித்து போன தாய்.!

Summary:

son try to kill mother for money

பெங்களூருவின் சதாசிவம் நகரில் வசித்து வருபவர் உத்தம் குமார். இவரது தாய் பாரதி. 20 வயது நிறைந்த இளைஞர் உத்தம்குமார். தன் தாய் பாரதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்துள்ளார்.மேலும் அந்த பணத்தை உத்தம் குமார் மது அருந்துவதற்கு செலவழித்துவிடுவாரோ என்கிற பயத்தில் அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததுள்ளது. மேலும் வாக்குவாதம்  முற்றவே ஆசிரமடைந்த உத்தம் குமார் தன் தாயையே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார்.பின் அங்கிருந்து தப்பி ஓடியுளளார் .

பின்னர் பாரதியின் கணவர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு முகத்தில் தீக்காயமடைந்த பாரதிக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

  

 மேலும் தனது மனைவி மீது  பெட்ரோல் ஊற்றி, கொலை செய்ய முயற்சித்த மகன் உத்தம் குமார் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் உத்தம் குமார் மீது வழக்குப்பதிவு செய்து  தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


Advertisement