தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த மகன்.!

தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த மகன்.!


son travelled helicopter for his dad death

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கே.ஆர்.சுப்பையா(72). இவரது மகன் சசிகுமார். திருப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இதைத்தவிர இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன. இந்தநிலையில் சசிகுமார் வேலை நிமித்தமாக இந்தோனிஷியா சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம்தேதி தந்தை சுப்பையா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சசிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து உடனடியாக இந்தோனிஷியாவில் இருந்து விமானம் மூலம் சசிகுமார் துபாய் வந்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு நேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து ரூ.5லட்சத்தில் வாடகைக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார்.

நேற்று மதியம் 1.15 மணிக்கு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கினார். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மீண்டும் ஹெலிகாப்டர் பெங்களூருவுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் வானிலை சரியாக இல்லாததால் ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பைலட்டும், அவரது உதவியாளரும் புதுக்கோட்டை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு, இன்று புறப்பட திட்டமிட்டுள்ளனர்.