12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது இது வேண்டாமே.... தாய் செய்த அட்வைஸ்.! தற்கொலை செய்துகொண்ட மகன்.!

12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது இது வேண்டாமே.... தாய் செய்த அட்வைஸ்.! தற்கொலை செய்துகொண்ட மகன்.!


son suicide for mother advice

வேலூா் மாவட்டம் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த ஜான் ஜெயகரன். இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்துள்ளனர். ஜெயகரன் கடந்தாண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இந்தநிலையில் ஜெயகரனின் மனைவி சுதா மகன்- மகளுடன் வசித்து வந்தாா். சுதாவின் 17 வயது மகன் ரொனால்டினோ தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், ரொனால்டினோ பள்ளி முடிந்ததும் மாலை நேரங்களில் வெல்டிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

தனது மகன் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருப்பதால், தற்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டாம் என சுதா மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரொனால்டினோ கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த சுதா தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் ரொனால்டினோவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.