காதல் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. நெஞ்சில் குத்திய மகன்.. கொட்டகைக்குள் மருமகன் கண்ட அதிர்ச்சி காட்சி.!
காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
விவசாயி:
Cuddalore Nellikuppam Murder: கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம், பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 62). இவர் விவசாயி ஆவார். சொந்த நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார். சிலம்பம், குஸ்தி ஆசிரியராகவும் இருக்கிறார். குணசேகரனின் மனைவி ஜெயசுந்தரி. தம்பதிகளுக்கு ராஜாராம் என்ற மகன், ஜான்சி ராணி, திவ்யா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
காவல் இருந்தார்:
இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஜெயசுந்தரி இயற்கை எய்திய காரணத்தால், குணசேகரன் மகன் ராஜாராமுடன் வசித்து வந்துள்ளார். சமீபகாலமாக இவர்களின் தோட்டத்தில் கொட்டகை அமைதி, அங்கேயே காவல் இருந்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
செல்போன் சுவிட்ச் ஆப்:
இந்நிலையில், குணசேகரன் செல்போனுக்கு நேற்று கீழ்மாம்பட்டியில் இருக்கும் மூத்த மருமகன் தவபாலன் போன் செய்து இருக்கிறார். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்தவர் கடலூர் வண்டிக்குப்பதில் வசித்து வரும் குணசேகரனின் இரண்டாவது மருமகன் தனிஷ் குமாருக்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.
கொலை:
இதன்பேரில் நேரில் சென்று பார்த்தபோது, குணசேகரன் நெஞ்சில் கூர்மையான ஆயுதம் கொண்டு குத்தப்பட்டு சடலமாக இருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நேரில் வந்த அதிகாரிகள் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு:
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தங்கியிருந்து நீண்ட மாதங்களாக வேலை செய்து வந்த ராஜாராம், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டபோது, அதனை கொடுக்க குணசேகரன் மறுத்துள்ளார்.
கைது:
சம்பவத்தன்று இதுகுறித்து பேச ராஜாராம் தந்தை தங்கியிருந்த கொட்டகைக்கு சென்றபோது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்தவர் தந்தையை கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் நேற்று ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!