"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
சாகுறதுக்கு முன்னாடி அந்த பெத்த மனசு எப்படி வலிச்சிருக்கும்!! பெற்ற தந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் அடித்தே கொன்ற மகன் கைது..
தலைக்கேறிய மதுபோதையில் பெற்ற தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்பட்டுத்தியுள்ளது.
ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூர் என்ற பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளியான இவருக்கு பிரேசன் என்ற மகன் உள்ளார். அவரும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துவரும் நிலையில், பிரேசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
கடந்த வியாழன் அன்றும், வழக்கம்போல் பிரேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஏதோ சில காரணங்களால் தந்தை மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தி வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திரமடைந்த பிரேசன், பெரிய கட்டையை கொண்டு தந்தையை தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தனபால், அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பெற்ற தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.