"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
மனைவியின் கண்முன்னே மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்... காரணம் என்ன தெரியுமா.?
மனைவியின் கண்முன்னே மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்... காரணம் என்ன தெரியுமா.?
கூடக்கோவில் அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் முனியாண்டி வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமங்கலம் அருகே உள்ள வலையன்குளம் பகுதியில் ஒத்திக்கு வீடு பார்த்தனர்.
அதற்காக முனியாண்டி தனது மனைவியின் நகையை வாங்கி அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். ஆனால் நகையை மீட்க முடியவில்லை. இது தொடர்பாக ஜெயா கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு நெடுமதுரையில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
மேலும் கணவர் மீது திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஜெயா. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி புகார் குறித்து விசாரிக்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு போலீசில் புகார் செய்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த முனியாண்டி மனைவியின் கண்முன்னே மாமியாரை சரமாரியாக அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.