பெரும்துயரம்.. அஸ்தியை கரைக்க சென்று தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!

பெரும்துயரம்.. அஸ்தியை கரைக்க சென்று தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!


son dead infront of mother ottanchathiram

அஸ்தியை கரைக்கச்சென்ற மகன், தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுதாவணியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணனின் மகன் அருண் (வயது 28). இவர் மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்திவரும் நிலையில், இவருடைய உறவினரான வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டச்சத்திரம், விஸ்வநாதன் நகரில் 2 நாட்களுக்கு முன்னதாக காலமானார். 

இதற்காக தன் தாயுடன் ஒட்டன்சத்திரம் சென்ற அருண், துக்கநிகழ்வில் கலந்து கொண்டு உறவினர்களுடன் விருப்பாச்சி தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்க சென்றார். அஸ்தியை கரைத்து விட்டு குளிக்க சென்றபோது திடீரென அருணுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

mathurai district

இதில் மிகவும் துயரமான சம்பவம், அவரது தாய் கண்முன்னே அவர் துடித்துடித்து உயிரிழந்ததுதான். பின் இதுகுறித்து சத்திரப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக போராடி அருணின் உடலை மீட்டனர். பின் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.