கைதாக போகிறாரா யாஷிகா ஆனந்த்..? நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு..! ரசிகர்கள் கலக்கம்...
சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்.!
சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்.!

மாற்று மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சகட்டத்தை பதிவு செய்துள்ளது.
தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் தமிழகத்தில் உள்ள சூரிய, நீர், காற்று, அனல், அணுசக்தி மின் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மாற்று மின்சார உற்பத்தி முறைகளுக்கு உக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கரிக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வந்தாலும், பிற ஆற்றல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரங்கள் அனைத்தும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவில், "சூரிய ஒளி மின் உற்பத்தி 28.01.2023 அன்று 4725.91 MW அளவில் உச்சம் தொட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 35 மி.யூ சூரிய ஒளி மின்சாரசரத்திலிருந்து நேற்று பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில், இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (28/01/2023 - 01:00 Hrs) 4725.91 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. 35 மி.யூ சூரிய ஒளி மின்சாரத்திலிருந்து நேற்று பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. #MKStalinGovt pic.twitter.com/uXCXYOG5mO
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 29, 2023