தமிழகம்

பெட்டிக்கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

தேனி மாவட்டம் போடி சாலை காளியம்மன் கோவில் அருகே விஜய பாபு என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி

தேனி மாவட்டம் போடி சாலை காளியம்மன் கோவில் அருகே விஜய பாபு என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில், விஜய பாபுவின் கடைக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பார்ப்பதற்கு சுமார் 6 அடி நீளமுள்ளது போலவும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு போலவும் தெரிந்தது. 

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய பாபு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பாம்பை பிடிப்பதற்கு போராடியுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பு தீயணைப்பு வீரர்களிடம் பிடிபட்டது.

அந்த பாம்பு சுமார் 6 அடி நீளமாகவும். மேலும், இந்த பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் வகையை சேர்ந்தது என தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாம்பபை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினர் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
 


Advertisement