சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.! வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்.!

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.! வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்.!


snake-in-home

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடப்பதற்கு முன்பே நேற்று அதிகாலையில் இருந்து சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்துள்ளன. இதனையடுத்து உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக 123 அழைப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

snake

இதனையடுத்து கிண்டி வனத்துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று பாம்புகளை பிடித்தனர். அங்கு 100 பாம்புகளுக்கு மேல் பிடிக்கப்பட்டு காடுகளில் கொண்டு சென்று விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வீடுகளில் பாம்புகள் புகுந்து உள்ளதாக தெரிந்தால் உடனடியாக 044-22200335, 9566184292 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது