BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மலேஷியாவில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்க தாய் பாசப்போராட்டம்.. கண்ணீர் கடிதம்.!
மலேஷியாவில் தவித்து வரும் வாலிபர் குடும்பத்தினருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது மகனை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் என தாய் கண்ணீருடன் பேசப்போராட்ட கோரிக்கை வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி, புதூர் பகுதியை சார்ந்தவர் ஆனந்த். இவரது குடும்பம் வறுமையில் வாடிவந்த நிலையில், மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு, போதைப்பொருள் கும்பலிடம் ஆனந்த் விற்பனை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கட்டுப்பாட்டில் ஆனந்த் இருந்தபோதே, அந்நாட்டு காவல் துறையினர் வசம் சிக்கியுள்ளார். இதனால் தன்னை மீட்கக்கோரி ஆனந்த் சகோதரருக்கு வீடியோ அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோவில், நான் உயிரோடு வந்தால் மகிழ்ச்சிகொள், உடல் மட்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சிகொள் என் பெற்றோர்களே என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து கடிதமும் அனுப்பியுள்ளார். இதனால் மகனை மீட்டுத்தர தமிழக அரசு உதவ வேண்டும் என ஆனந்தின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.