தமிழகம்

ஒலிபெருக்கியில் பேசி வந்த தகராறு.. 5 பேர் கும்பலால், இளைஞர் குத்திக்கொலை.!

Summary:

ஒலிபெருக்கியில் பேசி வந்த தகராறு.. 5 பேர் கும்பலால், இளைஞர் குத்திக்கொலை.!

பொங்கல் விழாவையொட்டி நடந்த போட்டியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம், இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. இதே கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்பவர், விளையாட்டுப்போட்டிகள் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி வாயிலாக பேசியுள்ளார்.

அப்போது, கிராமத்தில் வசித்து வரும் கார்த்திகேயன், கருப்பசாமி, அருண்குமார் ஆகியோர் ஒலிபெருக்கியில் பேச கூடாது என பிரச்சனை செய்யவே, அங்கு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவானந்தம் தரப்பு, கருப்பசாமி மற்றும் அருண்குமார் ஆகியோர் வீட்டிற்கு செல்கையில் அவர்களை இடைமறித்து தாக்கியுள்ளனர். கருப்பசாமிக்கு கத்திக்குத்து விழுந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருண் குமார் பலத்த காயத்தின் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கவலை துறையினர் சிவா, சிவானந்தம், கண்ணன், ராஜ்குமார், சரத்குமார் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement