பார்க்கவே பயமா இருக்கு! ராட்சதக் கழுகிடம் சிக்கி சின்னாபின்னமான மான்..... மின்னல் வேகத்தில் நடந்த அபூர்வ வேட்டை! வைரலாகும் வீடியோ!
காட்டுயிர்கள் உலகில் வலிமை எவ்வளவு அசாதாரணமாக வெளிப்படும் என்பதை உணர்த்தும் ஒரு வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. வானில் பறந்தபடியே தன்னைவிடப் பெரிய மானை தூக்கிச் செல்லும் கழுகின் அபார சக்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மின்னல் வேகத்தில் நடந்த தாக்குதல்
புல்வெளியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு மானை, வானத்திலிருந்து மின்னல் வேகத்தில் வந்த கழுகு தனது கூர்மையான நகங்களால் கவ்விப் பிடித்தது. எதிர்பாராத தாக்குதலால் மானால் தப்பிக்க முடியாமல், கழுகின் நகங்கள் அதன் முதுகில் ஆழமாகப் பதிந்தன.
அசுர பலத்தால் வானில் பறந்த கழுகு
சில நொடிகளில், அந்த ராட்சத கழுகு தனது அபார பலத்தை பயன்படுத்தி, மானை முழுமையாக தூக்கிக்கொண்டு வானத்தை நோக்கிப் பறந்தது. இந்த காட்சி காட்டுயிர்கள் உலகின் உண்மையான சக்தியை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிஆத்தீ....வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்! நொடிப்பொழுத்தில் வந்த சூறாவளி பெண்ணை ஆகாயத்தில் சுருட்டி கொண்டு.... அதிர்ச்சி வீடியோ!
கோல்டன் ஈகிளின் அபூர்வ வேட்டை
பொதுவாக கழுகுகள் முயல், பாம்பு போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடுவதே வழக்கம். ஆனால், இந்த Golden Eagle வகை கழுகு ஒரு முழு மானையே தூக்கிச் செல்லும் காட்சி அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
@QuantumAlteredX என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, கோடிக்கணக்கான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்று வைரலாகி வருகிறது. இயற்கையின் வலிமை எவ்வளவு ஆச்சரியமூட்டும் என்பதை மீண்டும் நினைவூட்டும் இந்த காட்சி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Eagle carrying an entire adult deer pic.twitter.com/YxCWkdyLSG
— Invisidon (@QuantumAlteredX) January 20, 2024