கஜாவின் கோரத்தாண்டவம், பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவ அட்டகாசமான ஐடியா, கண்ணீருடன் சிம்பு வெளியிட்ட வீடியோ உள்ளே .!



simbu-talk-about-gaja

வங்க கடலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நகர்ந்து வந்த  நிலையில் கடந்த 15-ம் தேதி அதிவேக காற்று மற்றும் மழையுடன் கரையை கடந்தது.

இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில்  மரங்கள் அடியோடு சாய்ந்து  பல வீடுகள் சேதமடைந்துள்ளது. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.ஓடு மற்றும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்றுவரை பல ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளது.

simbu

இவ்வாறு கஜா புயலால் பாதிக்கப்பட்டு உணவு,வீடு இன்றி தவித்து வரும் மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் நடிகர்கள் பலரும்  லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் யோசனை கூறி நடிகர் சிம்பு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "நாம் கொடுக்கும் பணம் சரியான விதத்தில் சென்று சேர்கிறதா என்பது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. சாதாரண ஒருவர் ஒரு 10 ரூபாய் உதவியாக கொடுக்க நினைத்தாலும் அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. அதனால் மொபைல் நிறுவனங்கள் மூலம் நிதியை நிவாரணத்திற்கு அனுப்பும் ஒரு முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்" என சிம்பு கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.